சனி, 20 மார்ச், 2010

கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கைக்கால்!

போரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்த் நேற்று வவூனியா நிவார ணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.வவூனியா ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலுள்ள இந்திய மருத்துவ மனையில் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்கள் குழுவினர் தங்கியூள்ளனர்.

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவூம் இங்கு விஜயம் செய்திருந்தார்.

19 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினர் செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 1000 பேருக்கு இலவசமாக கால்களை பொருத்துவதற்கு திட்ட மிட்டுள்ளன.நேற்று வரை 32பேருக்கு இலவசமாக கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என குழுவின் தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்தார்.அத்துடன் இதுவரை தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமாநோருக்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவூம் அவர்தெரிவித்தார்.

இலங்கை-இந்திய நட்புறவூ திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு நடைபெறுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர்.